மாட்டிக் கொண்டார் பெரியார்
சென்னை:
நாளுக்கு நாள் அ.தி.மு.க, காங்கிரஸ் மோதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தேவையில்லை என்கிற முடிவுக்குவந்துவிட்டாரோ இல்லையோ, சோனியா முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள்தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவமானப்பட்டது போதும். மூன்றாவதுஅணியில் இருந்து செயல்படுவோம். மூப்பனாரை தலைவராகக்கொண்டுசெயல்பட்டால் கூட்டணி வெற்றிகரமாகவே செயல்படும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர்கள் சோனியாவுக்கு தெரிவிக்க சோனியாவும் ஏற்றுக் கொண்டு விட்டார்என்றே சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. மூன்றாவதுஅணியை பலமாக அமைக்கவேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்யலாம்என்றவர்கள், மூப்பனார், ஜெயலலிதா விஷயத்தில் அமைதியாக இருப்பதும்கவனிக்கத்தக்கது என்றும் குறித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வருகின்ற 23 - ம் தேதி அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் சேர்ந்துபெரியாருக்கு விழா எடுக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு விழாத் தலைவர் மூப்பனார்.காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வரக்கூடாது. சோனியாவே ஆனாலும் சரி. அவர்கள்மேடையில் இருந்தால் நான் வரமாட்டேன் என்று சொன்னாராம் ஜெயலலிதா.
அதன்படியே பெரியார் விழா தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும்தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம்,காங்கிரஸ் பிரமுகர்களை அதிர வைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையும்அ.தி.மு.கவினர் மத்தியில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸை அதன் தொடக்க காலத்தில் இருந்து வேரூன்றசெய்தவர்கள் - வளர்த்தவர்களில் பெரியாரும் ஒருவர். தமிழ்நாடு காங்கிரஸ்வரலாற்றில் பெரியாருக்கு சிறப்பான இடம் உண்டு. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்தலைவராகவும் இருந்தார். தனது சமூக சீர்திருத்த கருத்துக்களுக்கு காங்கிரஸ்தலைவர்களிடையே எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் 1925-ல் காங்கிரஸைவிட்டு வெளியேறினார்.
காமராஜர் ஆட்சியை பொற்காலம் என்று போற்றிப் புகழ்ந்தவர் பெரியார்.பெரியாரின் பிரச்சாரங்களினால் தமிழக மக்கள் காமராஜரை மக்கள் தலைவர் என்றுஇன்றும் புகழ்ந்து வருகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் , அ.தி.மு.கழகத்தையும் பெரியார் ஆதரித்தநாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவரது சீரிய கொள்கைகளைகாற்றில் பறக்க விட்ட கழகங்கள் அவரது பெயரால் கிடைக்கும் லாபத்தை பெற இன்றுஅவருக்கு பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடப் போகிறார்களாம்.
பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த 1925 ம் ஆண்டு தொடங்கி இன்று75 ஆண்டுகளாகின்றன. இதை தமிழ்நாட்டில் கொண்டாட தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி மாபெரும் விழா ஒன்று எடுக்க வேண்டும். அவ்விழாவில் சோனியாகாந்திபேரூரை ஆற்ற அழைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.எம்.பி.சுப்பிரமணியம்.
பெரியார் மேடையில் காங்கிரஸ்காரர்கள் ஏறக் கூடாதாம். நாமே தனியாக ஒருமேடையமைத்து பெரியாருக்கு பெரிய விழா எடுப்போம். அந்த விழாவில்சோனியாவை அழைப்போம். ஜெயலலிதா பாணியிலேயே அவருக்கு பதில்சொல்வோம். அவரை கூட்டத்திற்கு அழைக்காமல் அ.தி.மு.க கூட்டணியிலேயேஉள்ள மற்ற தலைவர்களை மேடைக்கு அழைப்போம் என்று யோசிக்கஆரம்பித்துள்ளார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
கூட்டணியில் உள்ள தலைவர்களில் யார் யார் வருவார்கள், ஜெயலலிதாஅவர்களையும் போக்கூடாது என்று சொல்வார் என்று பேச்சு வர, சோனியா வந்தால்மூப்பனாரால் மேடையேறுவது தவிர்க்க முடியாது. திராவிட கழகம் கீ.வீரமணிபெரியார் விழாவை புறக்கணிக்க முடியாது. மற்ற தலைவர்களையும் அழைப்போம்.பெரும்பாலானவர்கள் மூன்றாவது அணி என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் தான்.கண்டிப்பாக கலந்துகொள்வார்கள்.
டெல்லிக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் தகவல் வரும். என்றுகாத்திருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். தமிழக அரசியல் கட்சிகளுக்கு,ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் ஒவ்வொரு தலைவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.இந்த முறை பெரியார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications