தப்பியோடிய பிஜி இந்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்து
சுவா:
பிஜித் தீவில் நடந்த புரட்சி மற்றும் உள்நாட்டுக் குழப்பத்தையடுத்து அங்கிருந்து தப்பி வெளியேறிய பிஜி இந்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்துவழங்கப்படவுள்ளது.
காமன் வெல்த் அமைப்பின் மனித உரிமைகள் விவகார பிரிவின் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, நியுசிலாந்தைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கியகுழு சமீபத்தில் பிஜியில் நடத்திய நேரடி ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிஜியிலுள்ள தங்களது வீடுகளிலிருந்து தப்பி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 350 பிஜி இந்தியர்கள் உண்மையிலேயே அகதிகளாகத் தப்பிவந்தவர்கள்தான் என்று இந்தக் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த மே மாதம் முதல் நைடாசிரி மாவட்டத்திலுள்ள லடோகா பகுதியில் 350 பிஜி இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். மே 19 ம்தேதி ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான புரட்சிக்கும்பல் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரியை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்தது.
இதையடுத்து தலைநகர் சுவாவில் வன்முறை வெடித்தது. சுவா தவிர வேறு பல நகரங்களிலும் இந்திய வம்சாவளியினர் தாக்கப்பட்டனர். இதையடுத்துபாதுகாப்பு தேடி இந்தியர்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
லடோகா முகாமிலுள்ள இந்தியர்களிடம் காமன்வெல்த் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர்களுக்குஅகதிகள் அந்தஸ்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் அனித் சிங் கூறுகையில், உண்மை அறியும் குழுவினர் முகாம்களில் உள்ள இந்தியர்களிடம் பல முறை விசாரணை நடத்தினார்கள்.அவர்கள் உண்மையான அகதிகள் என்று அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பல உதவிகளும் அளிக்கப்படும் என்று காமன்வெல்த் குழுவினர்நம்பிக்கை தெரிவித்தனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications