எனது முயற்சி தோல்வியடையவில்லை ... கோபால்
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்குரிய வேறு வழிகள் குறித்து தமிழக, கர்நாடக அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றுபெங்களூரில் புதன்கிழமை அரசுத் தூதர் கோபால் கூறினார்.
இதுதொடர்பாக கோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் மீட்பதற்காக இதுவரை மூன்று காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்து விட்டேன். என்னுடையபயணம் தோல்வியடையவில்லை. விரைவில் நடிகர் ராஜ்குமார் விடுதலையடைவார் என நம்பலாம்.
கடந்த வியாழக்கிழமையே வீரப்பனுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. நான் ராஜ்குமாரை அழைத்து வந்து விடலாம் என்று நினைத்திருந்த போதுதடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்த தகவல் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள 5 தீவிரவாதிகளைவிடுவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதும் தெரிந்தது.
இது குறித்து வீரப்பன் என்னிடம் கூறுகையில், தடா கைதிகள் விடுவிப்பில் அரசு அலட்சியம் காட்டுகிறது. இரு மாநில அரசுகள் ஏற்கனவேகொடுத்திருந்த வாக்கை அவர்கள் காப்பாற்றவில்லை என்றான்.
கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தடா கைதிகள் உள்பட 121 பேரை விடுவிப்பது மற்றும் தமிழக சிறைகளில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகளைவிடுவிப்பது போன்ற நிபந்தனைகளில் வீரப்பன் மிகவும் பிடிவாதமாக உள்ளான்.
ராஜ்குமாரை எப்படியாவது மீட்டு வர வேண்டும் என்று வெறியுடன் இருந்தேன். இப்போது அந்த முயற்சியில் சிறிய தடங்கல் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.
வீரப்பன் இப்போது பலமாக உள்ளான். அவனுடன் 9 பேர் உள்ளனர். ராஜ்குமாரை மீட்க ரஜினி மனிதாபிமான முறையில் முயற்சி செய்கிறார்.
காட்டில் ராஜ்குமார் வழக்கமான சுறுசுறுப்புடன் இருக்கிறார். காட்டின் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு நலமாக உள்ளார் என்றார்கோபால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications