கடைசிப் பயிற்சிப் போட்டியில கலக்கிய இந்திய ஹாக்கி அணி

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் முருவிலம்பா நகரில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியஆடவர் ஹாக்கி அணி தனது கடைசிப் போட்டியில் 12-0 என்ற கோல் கணக்கில்,ட்வீட்ஷயர் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியுடன் தனது பயிற்சிப் போட்டிகளை ஹாக்கி அணி முடித்துக்கொண்டது. சிட்னி வந்துள்ள இந்திய அணியுடன் வெள்ளிக்கிழமை ஹாக்கி அணிசேர்ந்து கொள்ளும்.

இந்திய அணி உள்ளூர்அணியுடன் விளையாடிய போதிலும் மிகவும் கவனமாகவேவிளையாடியது என்றார் அணியின் மேலாளர் ஜோதிகுமரன். அவர் கூறுகையில்,திட்டமிட்டப்படி கவனமாகவே விளையாடினோம். கிடைத்த ஒவ்வொரு கோல்வாய்ப்பையும் இந்திய வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.

ட்வீட்ஷயர் அணியுடனான போட்டியில், இந்தியாவின் தீபக் தாக்கூர் ஹாட்ரிக்செய்தார். கேப்டன் தன்ராஜ் பிள்ளை, பார்வர்ட் ககன் அஜித் சிங் ஆகியோர் தலாமூன்று கோல்களைப் போட்டனர். பல்ஜித் சிங் தில்லான் 2 கோல்கள் போட்டார். திலீப்திர்கே கடைசிக் கோலைப் போட்டார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+