ரூ. 491 கோடியில் கூவத்தைத் தூய்மையாக்கத் திட்டம்
சென்னை:
சென்னையின் "நறுமணம் மிக்க நதியான கூவத்தை தூய்மையாக்க ரூ. 491 கோடி மதிப்பில் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கூவம், பக்கிங்காம்கால்வாய், ஒட்டேரி கால்வாய் மற்றும் மாம்பலம் கால்வாய்களில் நகரின் கழிவு நீரால் ஏற்படும் மாசுவைக்கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரூ. 491 கோடிஅனுமதித்துள்ளது.
இந்தத் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும். திட்ட மதிப்பீட்டின் முழுத் தொகையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.
சென்னை நகரில் உள்ள கூவம், அடையாறு மற்றும் நான்கு கால்வாய்களில் நகரின் கழிவு நீர்தூய்மைப்படுத்தப்படாமல் கலப்பதால் இந்த நீர்வழிகள் மிகவும் மாசுபடுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த நீர் வழிகளின் தூய்மையை பாதுகாக்கவும் பல லட்சக்கணக்கான மக்களின் சுகாதார வாழ்வுக்கேற்றசுற்றுச்சூழலை உருவாக்கவும், இவற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கான இத்திட்டத்தை மத்திய அரசு தேசியநதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்டுள்ளது. என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் டி.ஆர்.பாலு.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications