90 ஆண்டு தண்டனை பெற்றவருக்கு "போனஸ் 20 ஆண்டு
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி பகுதியில் மூகமூடிக் கொள்ளையில் ஈடுபட்டு 90 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவருக்கு மற்றொரு வழக்கில், மேலும் 20 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வஞ்சரம், சங்கராபுரம் ஆகிய இரண்டு இடங்களில்மூன்று வருடங்களுக்கு முன்பாக நடந்த முகமூடி கொள்ளை சம்பவத்தில்தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுவத்தூர் கணேசனுக்கு 310 ஆண்டுகளும், பெரியசெல்வத்திற்கு (28) 210 ஆண்டுகளும், சின்ன செல்வத்திற்கு 270 ஆண்டுகளும்,கோவிந்தனுக்கு 90 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்புவழங்கபட்டிருந்தது.
இதே வழக்கில் பிச்சமுத்து என்பவருக்கு 90 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனைஅளித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அனைவரும் கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், வஞ்சரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த நாகலூர் காட்டுக்கொட்டகையில் உள்ள ஆசிரியர் குணசேகரன், ஜெகதீசன் வீடுகளில் 97-ம் ஆண்டுநடந்த கொள்ளை சம்பவத்திலும் கணேசன், பெரியசெல்வம், சின்ன செல்வம்,கோவிந்தன், பச்சமுத்து ஆகியோருக்குத் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி அசோகன், நாகலூர் கொள்ளை சம்பவம்தொடர்பாக பிச்சமுத்துவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
பிச்சமுத்து ஏற்கனவே 90 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்று அதை சிறையில்கழித்து வருகிறார். இப்போது "போனஸாக 20 ஆண்டுகள் அவருக்குக்கிடைத்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications