ராஜ்குமாருக்கு ரேடியோ மூலம் யோகாசன பயிற்சி
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு கழுத்துவலி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு ரேடியோ மூலம் யோகாசன பயிற்சிஅளிக்கப்பட்டது.
சென்ற மாதம் 30-ம் தேதி இரவு காஜனூரில் உள்ள பண்ணை வீட்டிலிருந்து பிரபலகன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.
அவரை மீட்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. நீண்டநாட்களாக காட்டில் இருப்பதால் ராஜ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் எனதுஅவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதால் அதைசரிசெய்வதற்குரிய யோகா பயிற்சியை ரேடியோ மூலம் ஒலிபரப்ப முடிவுசெய்யப்பட்டது. வீரப்பனுக்கு ரேடியோ கேட்கும் பழக்கம் உள்ளதால் யோகா பயிற்சிமுறையை ரேடியோவில் ஒலிபரப்ப முடிவு செய்ததாக ராஜ்குமார் குடும்பத்தினர்கூறினர்.
இதன்படி யோகாசன பயிற்சியளர் ஹொன்னப்ப பக்கீரப்ப நாயக்கர் என்பவர்வானொலி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ரேடியோ மூலம் யோகாசனசிகிச்சை அளித்தார்.
கர்லா கட்டை சுழற்றுவதால் மட்டும் கழுத்து வலி குணமடையும் என நினைக்கவேண்டாம். காட்டில் உள்ள கட்டைகள் மூலமும் கழுத்து வலியை குணப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் விரைவில் விடுதலை செய்யப்பட்டு விடுவீர்கள். மனம்சோர்வடைவதனால் மயக்கம், ரத்தக் கொதிப்பு ஏற்படக் கூடும். எனவே அதற்குஇடமளிக்க வேண்டும் என யோகாசன பயிற்சியாளர் ரேடியோவில் கூறினார்.
இது வியாழக்கிழமை பெங்களூர் வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications