இந்து முன்னணியினருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மசூதி வழியே தான் ஊர்வலம் நடத்துவோம் என்று இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறியுள்ள நிலையில், அவ்வாறுஊர்வலந் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநகர காவல்துறை கமிஷ்னர் காளிமுத்து இது குறித்து கூறுகையில்,

10ம் தேதி இந்து முன்னணியினர் திருவல்லிக்கேணி, திருட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து ஊர்வலம் நடத்துகின்றனர். கடந்த 3ஆண்டுகளாக ஊர்வலம் நடத்தப்பட்ட பாதையில் தான் இந்த முறையும் ஊர்வலம் நடத்த வேண்டும். அப்போது தான்ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

புதிதாக வேறு எந்தப் பாதையையும் ஊர்வலத்தினர் பயன்படுத்தக் கூடாது. இது குறித்து நாங்கள் ஏற்கனவே இந்துமுன்னணியினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதுவரை அவர்கள் எந்த பதிலும் அனுப்பவில்லை.

விநாயகர் ஊர்வலத்துக்காக 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

போலீஸ் வகுத்துக் கொடுக்கும் பாதையிலேயே, ஊர்வலங்கள் செல்ல வேண்டும். தடையை மீறி யாராவது வேறு பாதைகளில்ஊர்வலம் செல்ல முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கையாக சிலரை கைது செய்யும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் கமிஷ்னர் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+