ராஜ்குமார் மீட்கப்படுவார்.. ரஜினி நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விடுதலை இப்போது சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினைரப் பார்ப்பதற்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர்ராஜ்குமார் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை திரும்பினார். அவருடன் நக்கீரன்கோபாலும் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில்,முதல்வர் கலைஞர் வெள்ளிக்கிழமை பெங்களூர் சென்று கர்நாடக முதல்வருடன் பேச்சுநடத்தவுள்ளார்.
ராஜ்குமார் நிச்சயம் மீட்கப்படுவார். அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம்.
ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ராஜ்குமார் விடுதலைஇப்போது சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது என்றார் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications