தெ.ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற 100 இந்தியர்களுக்கு உத்தரவு
டர்பன்:
தென் ஆப்ரிக்காவில் உயர்பதவியில் உள்ள 100 இந்தியர்கள் விசா முடிந்து விட்டதால்அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று தென்ஆப்ரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தென் ஆப்ரிக்க உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில்,உயர் பதவி வகிக்கும் 200 பேர்களுக்கு விசா முடிந்து விட்டது. 200 பேரில் 100 பேர்இந்தியர்கள். மற்றவர்கள் பல்கேரியா, அல்பேனியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ்,ஜெர்மனி, ஹாங்காங், அமெரிக்கா மற்றம் இஸ்ரேல் நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் தென் ஆப்ரிக்காவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.விசா காலம் முடிந்தும், தொடர்ந்து தங்கியிருக்கும், உயர் பதவி வகிக்கும் 400வெளிநாட்டினர் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
தென் ஆப்ரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications