டெண்டுல்கரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Subscribe to Oneindia Tamil

கே: கோபம் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ப: யாருக்கு? உங்களுக்கா? உங்களுக்கு கோபம் வந்தால், நான் கோபத்தை அடக்க வேண்டும்; கோபத்தினால் சாதிக்கப்படுவது எதுவுமில்லை ;சாந்தமாக இருக்கப் பழகுங்கள் என்று சொல்லி உங்களைத் திருத்துவேன்.

கே: உங்களுக்கும், துக்ளக் வாசகர்களுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது?

ப: நான் நிரந்தர மாணவர் ; எனக்கு மார்க் போடுகிற நிரந்தர ஆசிரியர்கள், வாசகர்கள், என் படிப்பு முடிந்தபாடில்லை!

கே: பா.ஜ.க. விற்கு ஒரு தலித் தலைவராகியிருப்பது பெரியாருக்குக் கிடைத்த வெற்றி என்கிறாரே வீரமணி?

ப: இந்த மாதிரி பேச்சுக்களினால், பெரியார், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக உழைத்தார் - என்று காட்டிவிடலாம் என்று வீரமணிகணக்கிடுகிறார். பலிக்காது.

கே: நினைத்ததை அடைய ஏதாவது வழி கூறுங்களேன்?

ப: வீரப்பனை அணுகுங்கள்.

கே: தொலைத் தொடர்புத் துறை, தனியார் மயமாவதை வரவேற்பீர்களா?

ப: நிச்சயமாக வரவேற்கிறேன். அந்தத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் போடுகிற கூச்சல் உங்கள் காதுகளில் விழவில்லையா? வேலை செய்யவேண்டியிருக்குமே - என்ற பயம் அவர்களுக்கு இப்போதே வந்துவிட்டது, நல்லது நடக்கிறது என்பது இதிலிருந்தே புரியவில்லையா?

கே: தேர்தல் செலவுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கமே நிதி உதவி செய்ய வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 1200 கோடி ரூபாயை மத்திய,மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும்- - என்று பாராளுமன்ற ஆலோசனைக் குழு யோசனை தெரிவித்திருப்பது பற்றி...?

ப: இதனால் பெரிய நன்மை ஏற்படும் என்று நான் நம்பவில்லை. அரசு தரும் பணத்தை வாங்கிக் கொண்டு - அதற்கு மேல் எவ்வளவு செலவு செய்வதுஎன்பதில் கட்சிகளுக்குக்கிடையே போட்டா போட்டி நடக்கும்.

அரசுக்கு பணம் தண்டம். அதாவது சாதாரண மக்களுக்குச் சுமை ; இப்போது பணக்காரர்கள் மட்டுமே தேர்தல் நிதி சுமையைத் தாங்குகிறார்கள்.இதுவே தேவலை!

கே: ஒரு நாட்டில் தீவிரவாதம் வளர்வதற்கு முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்?

ப: தீவிரவாதத்தின் ஆரம்ப காலத்திலேயே அதை நசுக்கி, அது முளைத்த இடத்தில் வெந்நீர் ஊற்றாதவர்களை!

கே: ராஜ்குமார் மீட்கப்பட வேண்டும் என்கிறீர்கள் ; தடா கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்றும் கூறுகிறீர்கள் ; ஒரே குழப்பமாகஉள்ளதே?

ப: ஒரு குழப்பமும் இல்லை. இன்ன கோரிக்கைகள் நிறைவேறும் ; இன்ன கோரிக்கைகள் நிறைவேறுவது என்பது நடக்காது - என்ற எண்ணத்தைக்கூட வீரப்பனிடம் இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அதுதான் குழப்பம்.

இரண்டு அரசுகளிடம் பேசுகிற மாதிரியா அவன் பேசுகிறான்? அவனுடைய வேலைக்காரர்களிடம் கூட இவ்வளவு எதிர்பார்க்க மாட்டானேஅவன்?

முதலிலிருந்தே, எந்த கோரிக்கை நிறைவேறும், எது நிறைவேறாது என்ற சந்தேகத்தை அவன் மனதில் தோற்றுவித்திருக்க வேண்டும். அதைச்செய்திருந்தால், தடா கைதிகள் விடுதலையாவதை தவிர்த்திருக்கலாம்.

கே: அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்டடோருக்கு நஷ்டஈடு வழங்க தலா ரூபாய் 5 கோடி ஒதுக்கி, தமிழக, கர்நாடக அரசுகள் ஆணை பிறப்பித்துள்ளதுபற்றி...?

ப: வீரப்பனைத் தேடுகிற பணியில் உயிரழந்த அதிரடிப் படையினருக்கு என்ன நஷ்ட ஈடு? அதுபற்றி யாருக்கும் கவலை இல்லை? கொலைகாரனுக்குஉடந்தையாக இருந்தவர்களுக்கு நஷ்ட ஈடு ; கொலைகாரனை பிடிக்க முயற்சித்தவர்களுக்கு பட்டை நாமம், பலே!

கே: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைய ஒரு வழி கூறுங்களேன்?

ப: அந்தக் கட்சியின் மீது அமர்ந்து, அதை நசுக்கி. அதை வளரவிடாமல் கோஷ்டிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிற மூத்த தலைவர்களுக்கு ஓய்வளித்துவிட வேண்டும்.

அவர்களுக்கும் புகலிடம் இருக்கிறது. பழைய அ.தி.மு.க. மந்திரிகள் ஆரம்பித்திருக்கிற கட்சிக்குப் போய்விடலாம். அக் கட்சிக்கும் முதியோர் பலம்கூடும்; காங்கிரசுக்கும் பாரம் குறையும்.

கே: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதா? அல்லது தனித்து ஆட்சி அமைப்பதா? என்பது குறித்து தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம்;அதுபற்றி இப்போது பேச வேண்டாம் என்று அ.தி.மு.க., த .மா.கா. கடசிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் யோசனை கூறியுள்ளது பற்றி...?

ப: யாராவது எதையாவது பேசி தேர்தல் கூட்டணியைக் கெடுத்து விட்டால், தங்களுக்குக் கிடைக்கிற ஒரு சீட், ஒண்ணரை சீட் கூட கிடைக்காமல்போய் விடுமே - என்ற கவலை கம்யூனிஸ்ட்களுக்கு இருக்காதா?

கே: பத்திரிக்கைகளிலும். டி.வி.க்களிலும் வீரப்பனை ஹீரோவாகவும், அரசியல்வாதியாகவும் சித்தரிக்கிறார்களே - அது சரியா?

ப: என்ன தவறு?அரசியல்வாதிகளை ஹீரோக்களாகவும், தலைவர்களாகவும் சித்திரிக்கிறார்களே? அதுமட்டும் சரியா?

கே: ஆறு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளனர். இதனால் அவர்களால் என்ன சாதிக்க முடியும்?

ப: ஏன்? ஏன் சாதிக்க முடியாது? பென்ஷனுக்காகப் போராடலாம். முதியோர் இல்லம் அமைக்கப் பாடுபடலாம். மூத்த குடிமக்களுக்காக பந்தயங்களைநடத்தலாம். இப்படி எவ்வளவோ செய்யலாமே!

கே: தி.மு.க , அ.தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்று காமராஜ் கூறினார். ஆனால் நீங்களோ அ.தி.மு.க.வை விட தி.மு.க.வே மேல் என்கிறீர்கள்? அப்படியானால் காமராஜ் கூறியது தவறா?

ப: அவ்வப்போது, இரு மட்டைகளில் ஒன்று, வெய்யிலில் கிடந்து கொஞ்சம் உலர்ந்து, ஓரளவு வித்தியாசம் காட்டுகிறது. அந்த வித்தியாசத்தை நான்சுட்டிக் காட்டுகிறேன். காமராஜ் காலத்தில் அப்படி உலர்ந்த மட்டை, இரண்டில் ஒன்றுமில்லை.

கே: நீங்கள் வீரப்பன் விவகாரத்திலும், தமிழ்த் துரோகி எனும் பட்டத்தை வாங்குவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டீர்களே? இது எப்படி?

ப: அவசரப்படக் கூடாது. ராஜ்குமார் விடுதலையாகட்டும்.வெற்றி, வெற்றிஎன்று கூறி, கொண்டாட்டங்கள் நடக்கும் போது, உங்கள் ஆசைநிறைவேறும். எனக்கு பட்டம் மீண்டும் கிடைக்கும்.

கே: ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்த பின்பும், வேறொரு வி,ஐ.பி.யை கடத்த மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

ப: வீரப்பன் கடத்துகிறானோ இல்லையோ! தீவிரவாத இயக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன ; அவற்றைச் சார்ந்தவர்கள் - அல்லது அவற்றுக்கு நெருக்கமானவர்கள் - எத்தனையோ பேர் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டு, சிறைகளில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய விடுதலையை நிபந்தனையாக விதித்து, இந்த மாதிரி தீவிரவாதிகள் ஆள் கடத்தலில் ஈடுபட்டால் என்ன செய்வது? வீரப்பன் காட்டியுள்ளவழியில் - இரு மாநில அரசுகள் சென்றுள்ள பாதையில் - செல்ல எந்தத் தீவிரவாதக் கூட்டம் திட்டமிடுகிறதோ!

கே: தந்தை பெரியாரை ஜெயலலிதா வடிவில் காண்கிறேன்என்று வீரமணி கூறுவது பற்றி...?

ப:பெரியார், ஜெயலலிதா - இருவரில் யாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிப்பது என்றே எனக்குப் புரியவில்லை. இருவருக்குமே எனது அனுதாபங்களைத்தெரிவிக்கிறேன்.

கே: உண்மையைப் பேசி, எழுதி, எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கும் பிரகஸ்பதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: மொட்டையடித்துக் கொண்டு போக வேண்டிய ஆசாமிகள்!

கே: வீரப்பன் கேட்கும் 30 கைதிகளை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் காலவரையற்ற தடை விதித்திருக்கும் நிலையில், ராஜ்குமார் விடுதலைஎப்படி என்ற நிலை தோன்றியுள்ளது பற்றி...?

ப: நடக்காது என்று புரிந்து விட்டால், வீரப்பன் தன் நிபந்தனையைத் தளர்த்துவான் - என்று எதிர்பார்கக்க வேண்டியதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+