டெண்டுல்கரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
மும்பை:
மேட்ச் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக முன்னாள் இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கரை, அவரது மும்பை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்துவிசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக டெண்டுல்கர் தரப்பில் வெளியான பேக்ஸ் செய்தியில், சி.பி.ஐ. சிறப்பு குற்றப் பிரிவு இணை இயக்குநர் ஆர்.என்.சுவாமி மற்றும் கணபதிஆகியோர் புதன்கிழமை வந்து சந்தித்தனர். இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்குள் வேறு யாராவது வெளி ஆட்கள் வருவது வழக்கமா என்பது குறித்துடெண்டுல்கரிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
டெண்டுல்கருக்கும், வீரர்களுக்கும் இடையிலான உறவு, நட்புறவு குறித்தும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
கிரிக்கெட் விளையாட்டை எப்படி சீர் செய்வது என்பது குறித்தும் டெண்டுல்கரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டறிந்தனர் என்று அந்த பேக்ஸ் செய்தியில்கூறப்பட்டிருந்தது.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்திய 17-வது நபர் டெண்டுல்கர். மே 2-ம் தேதி மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications