பாகிஸ்தானை தோலுரித்த வாஜ்பாய்
ஐக்கிய நாடுகள் சபை:
ஐக்கிய நாடுகள் சபையில் மில்லினியம் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானை மிகக் கடுமையாகத்தாக்கினார். அந் நாட்டின் சுய ரூபத்தை தோலுருத்திக் காட்டினார்.
ஜனநாயகத்தை நசுக்கிவிட்டு சுதந்திரம், நேர்மை குறித்து ஒரு நாடு வியாக்கியானம் பேசி வருகிறது என அவர்கிண்டலடித்தார். வாஜ்பாயியின் கடுமையான பேச்சு பாகிஸ்தான் உள்பட மற்ற நாடுகளையும் திகைக்க வைத்தது.
பொதுவாக அமைதியாகவே தனது நாட்டு நிலையை விளக்கும் வாஜ்பாய் இம்முறை பாகிஸ்தானை வெளுத்துவாங்கினார்.
வாஜ்பாய் கூறுகையில்,
தீவிரவாதத்தை தூண்டிவிட்டுவிட்டு, பக்கத்து நாட்டில் (இந்தியாவில்) வன்முறையைத் தூண்டுவிட்டுக் கொண்டுஅமைதி குறித்தும், அன்பு குறித்தும் ஒரு நாடு (பாகிஸ்தான்) பேசி வருகிறது. தனது நாட்டில் ஜனநாயகத்தைவேறோடு அறுத்து எறிந்துவிட்டு ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் வந்து உலக நியாயம் குறித்து அந்த நாடுபேசுகிறது.
வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. செயலிலும் நேர்மை இருக்க வேண்டும். அது இல்லாமல் வெறும் பேச்சுஉதவாது.
அணு ஆயுத பலம், ஏவுகணைகள் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெறுவதற்காக என்ன்ென முறைகோடானவழிகள் இருக்கின்றனவோ அதையெல்லாம் செய்துவிட்டு இப்போது தெற்காசியாவில் அமைதி குறித்துகவலைப்படுவதாக அந்த நாடு ஒப்பாரி வைப்பது நகைப்பூட்டுகிறது.
நாங்கள் செய்த பல நல்ல ஒப்பந்தங்களை குப்பையில் தூக்கிபோட்டுவிட்டு இங்கு வந்து போர் தடுப்பு ஒப்பந்தம்செய்து கொள்ளலாமா என்று எங்களிடம் கேட்கிறார்கள்.
தீவிரவாதிகளை அனுப்பி இந்தியாவில் 30,000 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய அந்த நாடு அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தக் கூப்பிடுகிறது. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
ஒரு பக்கம் தீவிரவாதத்தைத் தூண்டுவது மறுபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது. பாகிஸ்தான் இந்த இரட்டைவேஷத்தை நிறுத்தாத வரை பேச்சுவார்த்தை என்பது சாத்தியமேயில்லை.
வளர்ச்சுக்கு அமைதியும், ஜனநாயகமும் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த நாட்டை விட எங்களுக்குநன்றாகவே தெரியும் என முழங்கினார் வாஜ்பாய்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications