சென்னையில் விநாயகர் ஊர்வலம்: போலீஸார் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் விநாயகர் ஊர்வலம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. இதையடுத்து சென்னை நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து மக்கள் கட்சி சனிக்கிழமை நடக்கும் விநாயகர் ஊர்வலத்தை நடத்துகிறது. தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை பகுதிகளில் இருந்து வரும்விநாயகர் சிலைகள் காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் சீரணி அரங்கை அடையும். அங்கு சிலைகள் கடலில் கரைக்கப்படும்.

ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும். இந்த ஊர்வலத்தில் பெரும்பாலும் கலவரம் நடக்காமல் இருப்பதில்லை. அதனால்போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் சனிக்கிழமை இந்து மக்கள் கட்சியும், ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினரும்ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், நகரில் தீவிரவாதிகள் எவரும் ஊடுருவியிருக்கிறார்களா? என்பது உள்பட பல கோணங்களில் கண்காணித்துவருகின்றனர். இதற்காக கொடி அணிவகுப்பையும் போலீஸார் பல இடங்களில் நடத்தினர். பதட்டம் எதுவும் ஏற்படாதவகையில் போலீஸார் காவல்காத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+