"உடனே விவாதிக்க வேண்டும்.." மேகதாது விவகாரம்.. நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட் மாணவர் போராட்டம், அயோத்தி காணிக்கை திருட்டு என பல விஷயங்கள் பெரிதாக வெடிக்கிறது. இதற்கிடையே அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, மேகதாது விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று அவை கூடியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. காலை முதலே அவை பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிறகு இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.

DMK Parliament Debate

ஒத்திவைப்பு நோட்டீஸ்

அவை 2வது நாளாக இன்று கூடுகிறது. இதற்கிடையே கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். ராஜ்யசபாவில் திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். அவையின் அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்து மேகதாது அணை விவகாரம் குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.

உடனே விவாதிக்க வேண்டும்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அமைக்க திட்டமிட்டுள்ள மேகதாது நீர்த்தேக்கம், தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இது தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்களவையிலும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

மேகதாது விவகாரம்

மேகதாது என்பது கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள பகுதியாகும். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே கர்நாடக அரசின் திட்டமாகும். பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே இந்த மேகதாது திட்டத்தின் நோக்கம் என்று கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

இருப்பினும், இதற்கு தமிழ்நாட்டில் மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி நீரின் ஓட்டம் தடைப்படும் என்று தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நீர் பங்கீடு பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் என்றும் இதனால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.

தமிழ்நாடு கர்நாடகா

இந்த மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பல காலமாகவே திமுக இதை எதிர்த்தே வருகிறது. ஆளும் கட்சியாக இருந்த போதும் மேகதாது அணையை திமுக எதிர்த்தே வந்துள்ளது. இந்தச் சூழலில் தான் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+