ராஜ்குமார் மீட்பு முயற்சிக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் ஆதரவு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கு தமிழக-கர்நாடக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை எதிர்க்கட்சியினருக்கு விளக்குவதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா சனிக்கிழமை கூட்டினார்.
முதல்வர் இல்லமான கிருஷ்ணாவில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராஜ்குமாரை மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். எதிர்க்கட்சித்தலைவர்களும் அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகளில் திருப்தி தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்திருந்தபோது, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் நடத்திய ஆலோசைனையின்போது, வீரப்பனுடன்பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று தீர்மானித்தனர்.
இதுதொடர்பாக, ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடக உள்துறை செயலாளர்கள் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, மத்தியஉள்துறை செயலாளர்களிடம் விளக்கிக் கூறினார். அவர்கள் இதற்கு அனுப்பிய பதிலில் பேச்சுவார்த்தை மூலமே இதை அணுகுவது நல்லது எனகூறியுள்ளனர்.
டாக்டர் ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன என்றார் கார்கே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications