காற்று வாங்கும் கன்னட படம் திரையிட்ட தியேட்டர்கள்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கர்நாடகத்தில் உள்ள தியேட்டர்களில் புதிய கன்னடப் படங்களைத்திரையிடக்கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும்அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்ட ஜூலை 30 ம் தேதி முதல் கர்நாடகத்தில் அனைத்து தியேட்டர்களும்மூடப்பட்டன. இதனால் சினிமா படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும்ஸ்தம்பித்தன.
இதற்கிடையே காட்டிலிருந்து கேசட் கொடுத்தனுப்பிய நடிகர் ராஜ்குமார் திரைப்பட நடவடிக்கைகளை எனக்காகநிறுத்தி வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், படங்களைத் திரையிட அனுமதிக்காவிட்டால்,புதிய சங்கம் துவங்கப் போகிறோம் என்று கர்நாடக திரைப்பட உரிமையாளர்கள் நெருக்குதல் கொடுத்தனர்.
இதனால் வேறு வழியில்லாமல், 10 நாட்களுக்கு முன் பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் உள்ள அனைத்துத்தியேட்டர்களும் திரையிடப்பட்டன. இருப்பினும் தமிழ்ப் படங்கள் தவிர பிற மொழிப் படங்கள் மட்டும்திரையிடப்பட்டன.
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கே கூட்டம் அலைமோதியது. கன்னடப்படங்களைப் பார்க்க ஆள் இல்லை. இந்த நிலையில், கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் ராஜ்குமார்விடுதலையடையும் வரை புதிய கன்னடத் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த படம் உள்பட 30 க்கும் மேற்பட்ட புதிய கன்னடத்திரைப்படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. புதிதாக தற்போது 3 படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளன. இவற்றில்,ஸ்பார்ஷா மட்டுமே சுமாராக ஓடுகிறது. பிற படங்களான பூமி, ஆஸ்திரா ஆகிய படங்களுக்கு கூட்டமே இல்லை.
தியேட்டர்களைத் திறந்தும் வசூல் ஆகாத படங்களை மட்டுமே ஓட்ட வேண்டிய நிலை எழுந்திருப்பதால், கன்னடப்படங்களை மட்டுமே திரையிடும் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications