27-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் ... மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை எதிர்த்து த.மா.கா. சார்பில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சிறை நடைபெறும் என அக்கட்சியின் தலைவர்மூப்பனார் அறிவித்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள ஜவஹர் மைதானத்தில் காமராஜர் பிறந்தநாள், ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா மற்றும் சுதந்திர தின விழாபொதுக்கூட்டத்தில் பேசும் போது இதை மூப்பனார் அறிவித்தார்.
த.மா.கா. சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருக்கிறது. இது குறித்த தீர்மானம் சிதம்பரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரும் பிறந்த புண்ணிய பூமி இது. இங்கு போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதை மிகவும் பெருமையாகநினைக்கிறேன்.
இம்மாதம் 27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் த.மா.கா. சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications