இலங்கை: தேர்தல் அமைதியாக நடக்க மஞ்சள் "பேட்ஜ் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் பொதுத்தேர்தலை அமைதியாக நடத்தக்கோரி மஞ்சள் பேட்ஜ் பிரச்சாரம் நடத்த தொழிற்சங்கங்கள்திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த மஞ்சள் பேட்ஜ் பிரச்சாரத்தில் 60 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புக்கள் கலந்து கொள்ளும். கையில் மஞ்சள் ரிப்பன்கட்டிக்கொண்டும், தங்கள் வாகனங்களில் மஞ்சள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டும் இவர்கள் பிரசாரம் மேற்கொள்வர்.

இது குறித்து தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புக்கள் கூறுகையில், நாட்டில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தி இந்தப்பிரச்சாரம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளது.

சிங்கள வார இதழின் முன்னாள் ஆசிரியர் பான்குலா பத்மா குமாரா கூறுகையில், தலைநகர் கொழும்பின் மத்தியப் பகுதியான எல்பின் ஸ்டோன்தியேட்டரிலிருந்து இந்த மஞ்சள் பேட்ஜ் பிரச்சாரம் தொடங்கும். இதில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், வர்த்தக அமைப்புக்களைச்சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றார்.

மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதி கூறுகையில், நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும், ஜனநாயகத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த மஞ்சள்பேட்ஜ் பிரச்சாரம் நடத்தப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரிக்கை:

இதற்கிடையே, தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.

சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபின் உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அந்த அரசுக்குரியபோலீஸ் அதிகாரிகளும் மாற்றப்படவேண்டும். ஒவ்வொரு எம்.பி.க்கும் 4 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் வாபஸ் பெறப்பட வேண்டும்.

மேலும் இலங்கையில் சில பகுதிகளில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்25 க்கும் மேற்பட்ட புலிகளின் தற்கொலைப் படைகள் ஊடுருவியுள்ளதாக எங்களுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களைக் கைது செய்யும்வகையில் தேடி வருகிறோம்.

இதுதவிர விடுதலைப்புலிகள் என்ற சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+