130 வீரர்கள் சாவுக்கு பொறுப்பேற்கிறார் இலங்கை ராணுவத் தளபதி
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில், விடுதலைப் புலிகள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில்அரசு அதிருப்தியுடன் இருந்தால், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று ராணுவத் தளபதி ரோஹன் தலுவத்தே முன்வந்துள்ளதாகசெய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமைஆபரேஷன் ரவிகிரண் என்ற பெயரில் மடுவில், நானுவில், சரசாலை ஆகிய இடங்களி விடுதலைப் புலிகள் மீது ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 230 க்கும் மேற்பட்ட புலிகள் இறந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 130 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ராணுவ தளபதி ரோஹன் தலுவத்தே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டின.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் காமினி அட்கோரலே விடுத்துள்ள செய்தியில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுதெளிவான திட்டமில்லாமல் புலிகள் மீதான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை நாம்பலிகொடுத்துள்ளோம். இது கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்றுகுற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை ராணுவ அமைச்சர் அனுராதா ரத்வத்தே, ராணுவத்தின் திடீர் தாக்குதல் குறித்து ரோஹன் தலுவத்தேயிடம் விளக்கம் கேட்டதாகத்தெரிகிறது. அப்போது, ரவிகிரண் நடவடிக்கை குறித்து அரசு அதிருப்தியுடன் இருந்தால், அதற்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று ரோஹன்கூறியதாக சண்டே ட்ைமஸ் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications