பெரியாருக்கு ஜெ. விழா எடுக்கக் கூடாதா? ...கேட்கிறார் வீரமணி
சென்னை:
பெரியாருக்கு விழா எடுக்க ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை என கருணாநிதிகூறியதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி கண்டணம் தெரிவித்துள்ளார்.
வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெரியார் விழாவுக்குச் தலைமைதாங்கலாமா? அவருக்குத் தகுதி உண்டா? அப்படித் தாங்குவது ஒன்பதாவது அதிசயம்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அப்படி ஒரு அதிசயம் நடந்தால்வரவேற்பது தானே?.
அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் பெரியார்விழாவிற்கு ஜெயலலிதா தலைமை தாங்குவது என்பது. அதில் தி.மு.க. வுக்கு என்னவந்தது?
நூற்றுக்கு நூறு பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தான் விழாவிற்குத்தலைமை தாங்க வேண்டும் என்றால் அத் தகுதி தி.மு.க. தலைவருக்கு உண்டா?
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை ஒரு இயக்கமாக நடத்த மாட்டோம்என்று துக்ளக் ஏட்டுக்குப் பேட்டி கொடுத்தவர் பகுத்தறிவுக் கொள்கையைப் பற்றி பேசதகுதி உண்டா?
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் பெரியார் விழாவிற்குத் தலைமைதாங்கலாமா? என்று கேட்கிறார். என்றைக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுஒப்புக் கொண்டார்களோ இதைப்பற்றியெல்லாம் பேசத் தகுதி உண்டா?
அ.தி.மு.க.வை திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்த நிலையிலும்கூட, ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தை ஒரேஇயக்கமாகப் பார்த்து அழைத்து, ஆட்சி சார்பில் பெரியார் விழா நடத்தினார். அதற்குமுன் ஆட்சிக்கு வந்த தி.மு.க. விற்கு அப்படி ஒரு நினைவு ஏற்பட்டதுண்டா? என்றுகூறியுள்ளார் வீரமணி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications