5 தீவிரவாதிகளை விடுவிக்க முடிவு செய்தது சரியே .. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம்
டெல்லி:
வீரப்பன் கோரிய 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது சரியானதே என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும் வீரப்பன் கடத்தி ஆறு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ராஜ்குமாரை விடுவிக்கவேண்டுமானால் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகள் மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழ்த் தடா கைதிகள்உள்ளிட்ட 121 பேரை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் கோரிக்கை விதித்துள்ளான்.
இக் கோரிக்கையை ஏற்ற தமிழக, கர்நாடக அரசுகள், சம்பந்தப்பட்ட கைதிகளை விடுவிக்க முடிவு செய்தன. இதை எதிர்த்து, வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில் கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார். 1992 ம் ஆண்டில்எஸ்.ஐ.ஷகீல் அகமது கொல்லப்பட்ட போது அவரையும் சேர்த்து மொத்தம் 28 போலீஸார் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1 ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி பரூச்சா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ஞ்ச் விசாரித்தது.விசாரணைக்குப் பின் 51 தடா கைதிகளை விடுவிப்பதற்கு தடை விதித்தது.
இதேபோல் தமிழ்த் தீவிரவாதிகள் 5 பேரை விடுவிப்பதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்ற சுப்ரீம்கோர்ட், விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, தமிழக அரசு பதில் மனு தயார் செய்தது. இந்த மனு திங்கள் அல்லதுசெவ்வாய்க்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications