த.மா.கா. போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது ..மூப்பனார்
சென்னை:
திமுக அரசை எதிர்த்து தமாகா நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தில் அதிமுகஉள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பங்கேற்காது என்று மூப்பனார் தெரிவித்தார்.
இது தமாகா தனித்து நடத்தும் போராட்டம் என்பதால் வேறு கட்சிகளுக்கு அழைப்புவிடவில்லை என்றார் அவர்.
பல்வேறு மக்கள் பிரச்னைகளை முன் வைத்து மாநிலம் தழுவிய சிறை நிரப்பும்போராட்டம் நடத்தப் போவதாக தமாகா அறிவித்துள்ளது. வருகிற 27-ம் தேதிநடைபெறவுள்ள இப்போராட்டம் பற்றி திட்டமிடுவதற்காக தமாகா செயற்குழுசென்னையில் செவ்வாய்க் கிழமை கூடியது.
சத்தியமூர்த்தி பவனில் தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் கூடியஇக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தனுஷ்கோடிஆதித்தன், சோ.பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் சிதம்பரம், ஜெயந்தி வரவில்லை.
பகல் 11.30 மணிக்கு துவங்கிய செயற்குழுக் கூட்டம் மதியம் 2 மணி வரைநடைபெற்றது. பின்னர் செய்தியாளர்கள் மூப்பனாரை சந்தித்தனர்.
27-ம் தேதி 234 தொகுதிகளில் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம்நடத்துகிறோம். மக்கள் பிரச்னைகளுக்காக மக்களே நடத்தும் போராட்டம் இதுஎன்றார்.
கூட்டணி கட்சியான அதிமுகவை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டபோது,கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்குமதச்சார்பற்ற அணியாக நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் என்று பட்டும் படாமலும்பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு கோரிக்கை பற்றி கேட்டபோது, சும்மா அதையே கேட்காதீர்கள்என்று டென்ஷனான மூப்பனாரிடம், சிதம்பரம் ஏன் வரவில்லை என்று விடாமல்கேட்டனர் நிருபர்கள்.
திங்கள்கிழமையே என்னிடம் தகவல் சொல்லி விட்டு தான் வெளியூர் சென்றுள்ளார்என்று விளக்கம் அளித்தார் மூப்பனார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications