விபத்துக்குள்ளான விமானத்தில் பழுதில்லை - விசாரணை அறிக்கை
டெல்லி:
பாட்னா அருகே விபத்துக்குள்ளான அல்லையன்ஸ் ஏர் விமானத்தில் எந்தப் பழுதும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான 737 போயிங் விமானம் கடந்த ஜூலை 17-ம் தேதி பாட்னா அருகே கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் 55 பேர் இறந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஏர் மார்ஷல் ராஜ் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் பறப்பதற்கு ஏற்றதாகத்தான் இருந்துள்ளது. அதில் பயணம் செய்த 2 விமான ஓட்டிகளும், 4 விமானப் பணிப்பெண்களும்விமானத்தில் ஏறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
பாட்னா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் விமானத்தில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை. இறக்குவதற்கு வசதியாக விமானத்தின்சக்கரங்கள் விமானத்தின் உள்ளேயிருந்து வெளியே வரவில்லை. இதுதான் விபத்துக்குக் காரணமாக இருக்கமுடியும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஒரு விசாரணையின் அறிக்கை மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணையில் ஒளிவுமறைவு இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையிலும், விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள், விபத்து குறித்து தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையிலும் இந் நடவடிக்கையைமேற்கொண்டதாக ராஜ் குமார் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications