விடை பெறுகிறார் தடகள வீரர் ராஜீவ் பாலகிருஷ்ணன்
டெல்லி:
சர்வதேச அதலெடிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் அதலெடிக்ஸ் வீரர் ராஜீவ் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தற்போது சர்வான் சர்வதேச அதலெடிக் போட்டிகளில் பங்கு கொண்டுள்ள அவர், இப் போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார்.
4ஙீ 100 தடை ஓட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பல சர்வதேச போட்டிகளில்பங்கு கொண்டவர் ராஜீவ் பாலகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வரும் அவர்,சாப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த அவர் தான் பார்த்த வேலையைராஜிநாமா செய்து வந்து வந்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற நிர்ணயிக்கப்பட்ட 39.28 நிமிட நேரத்தில் பந்ததூரத்தைக் கடந்து ராஜீவ் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேர் கொண்ட அணி தகுதிபெற்றது.
ஆனால், பின்னர் நடந்த ஆய்வில் சக வீரர் ஆனந்த் மென்செஸ் செய்த தவறால்ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தொடர் ஓட்ட அணி தகுதி இழந்தது.
100 மீட்டர் பந்தயத்தில் கலந்து கொண்ட பாலகிருஷ்ணன், நிர்ணயிக்கப்பட்ட தகுதிஅளவை எட்டாததால் சிட்னி ஒலிம்பிக்குத் தகுதி பெறவில்லை.
இதையடுத்து சர்வதே அதலெடிக்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற ராஜீவ்பாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு சாப்ட்வேர் பொறியாளர்பணியில் தொடர்ந்து ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார்.
அதலெடிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு என்னால் முடிந்ததைத் செய்துவிட்டதாகக்கருதுகிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் சார்பில் கலந்து கொள்ளமுயற்சிப்பேனா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.
கடைசியாக நான் பார்த்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். இப்போது நான்கலந்து கொண்டுள்ள அதலெடிக்ஸ் போட்டிக்குப் பிறகு முழு மூச்சில் வேறொருவேலையைத் தேடும் பணியில் இறங்குவேன் என்றார் ராஜீவ் பாலகிருஷ்ணன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications