இந்தியாவில் கண் வைக்கிறார் பில் கேட்ஸ்
டெல்லி:
உலகில் மிகச் சிறந்த சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் வரும் புதன்கிழமை இந்தியா வருகிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழா இந்த வாரம்கொண்டாடப்படவுள்ளது.
அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பில் கிளின்டன் இந்தியா வருகிறார். பில் கேட்ஸின் இப் பயணம் இந்திய சாப்ட்வேர் துறை வளர்ச்சிக்கு மிகவும்பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக சாப்ட்வேர் துறையில் வேகமான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் இந்தியா பெற்று வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் பில்கேட்ஸ் இந்தியா வருகிறார் என்று சாப்ட்வேர் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா வரும் பில் கேட்ஸ், இங்குள்ள சில சாப்ட்வேர் நிறுவனத் தலைவர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பில் கேட்ஸ் இந்தியா வருவது அவரது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், இந்தியாவுக்கும் பரஸ்பர பயனைத் தரும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால், வாஜ்பாயை பில் கேட்ஸ் சந்திக்கமுடியாமல் போனது துரதிருஷ்டவசமானது. இல்லையென்றால் வாஜ்பாயை பில் கேட்ஸ் நிச்சயம் சந்தித்திருப்பார் என்று மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. சாப்ட்வேர் துறையில் ஏராளமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் பில் கேட்ஸின் இப் பயணம் ஒரு தொழில் முறைப்பயணமாகவே இருக்கும்.
கடந்த முறை இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் இந்தியாவில் சாப்ட்வேர் வளர்ச்சி மையம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அதிகமானமுதலீடுகளையும் அவர் செய்தார்.
பில் கேட்ஸின் அறிவிப்புக்கு ஏற்ப ஹைதராபாத்தில் சாப்ட்வேர் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும்பில் கேட்ஸ் பயணத்தில் ஏதாவது அறிவிப்பு நிச்சயம் இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானசேவையைத் தரும் என்று அந் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர் பூனம் கவுல் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications