ஒலிம்பிக்: குத்துச் சண்டை நடுவர்களைக் கண்காணிக்க கேமராக்கள்
மெல்பெர்ன்:
சிட்னி குத்துச்சண்டை போட்டியைக் கண்காணிக்க மேலும் 4 கேமராக்கள்பொருத்தப்பட உள்ளன. போட்டி நடுவர்கள் தவறு செய்வதில் இருந்து தடுக்கவும்,உண்மையான வெற்றி வீரரைக் கண்டறியவும் இந்த நடவடிக்கையை போட்டிஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
குத்துச் சண்டைப் போட்டியில் ஒரு வீரரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கீழேவிழும் மற்றொரு வீரர் அடுத்த 10 நொடிக்குள் மீண்டும் எழுந்துகொண்டால்தான்தொடர்ந்து அப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
அந்த 10 நொடிகளை ஒரு வீரர் கீழே விழுந்ததில் இருந்து போட்டி நடுவர்கணக்கிடுவார். இந்த நொடிகளை போட்டி நடுவர் கணக்கிடுவதில் தவறு நேரவாய்ப்புள்ளது. அவ்வாறு பல ஆட்டங்களின்போது முறைகேடுகள் நடந்துள்ளன.
இதனால், உண்மையான வெற்றியாளர் தோல்வியடைந்ததாகவும், மற்றொரு வீரர்வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டதுண்டு. அதில் சில முறை முடிவுகள் பிறகுமாற்றி அறிவிக்கப்பட்டதுண்டு.
இவ்வாறு தவறான தீர்ப்பால் சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இழக்கநேர்ந்த வீரர்கள் உள்பட பலர் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
அதன்படி இம் மாதம் நடைபெற உல்ள சிட்னி ஒலிம்பிக்கில் நடுவர்கள் தவறுசெய்வதிலிருந்து தடுக்கும் பொருட்டு குத்துச் சண்டை போட்டி நடைபெறும்வளையத்தின் 4 முனைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இந்த கேமராக்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். போட்டி நடுவர் தவறுசெய்துவிட்டதாக எந்த வீரராவது கருதும்பட்சத்தில் அவர் கொடுக்கும் புகாரை வைத்துகம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட போட்டியை மீண்டும் பார்த்து தவறுகண்டுபிடிக்கப்படும்.
நடுவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் எந்த வீரருக்கு எதிராக தீர்ப்புவழக்கப்பட்டதோ அவருக்கு ஆதாயமாக புள்ளி வழங்கப்படும். இந்த புதியமுறையை குத்துச் சண்டை வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications