15- ம் தேதி துவங்குகிறது திமுக முப்பெரும் விழா
சென்னை:
திமுகவின் முப்பெரும் விழா வருகிற 15ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல் நாள் நிகழ்ச்சிகள் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. திமுக பொதுச்செயலாளர்அமைச்சர் அன்பழகன் தலைமை வகிக்கிறார்.
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி,மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளித் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுகஅறக்கட்டளை சார்பில் நிதியுதவி அளிக்கிறார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவமாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறார் முதல்வர்.
நிகழ்ச்சியில் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சான்றிதழ்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இரவில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான பெரியார் விருது தென்னவனுக்கும், அண்ணா விருது சுப.தங்கவேலனுக்கும்,பாவேந்தர் பாரதிதாசன் விருது அமுதனுக்கும், கலைஞர் விருது திராவிடமணிக்கும் வழங்கப்படுகிறது. விருதுகளை வழங்கி அவர்களை கவுரவிக்கிறார்முதல்வர் கருணாநிதி.
பின்னர் சங்கத்தமிழ் இசை நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. மறுநாள் 16-ம் தேதி மாலையில் வள்ளுவர் கோட்டத்தில் பல்கலை மேடை நிகழ்ச்சிநடைபெறுகிறது. திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் இவ்விழாவில் சென்னை மேயர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
இவ்விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் "வேர்கள் விழுதுகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
17-ம் தேதி மாலை முப்பெரும் விழாப் பொதுக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெறுகிறது.
நாகூர் அனீபா இசையுடன் துவங்கும் இந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மாறன் ஆகியோர் பேசுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications