பதவியை உதறினார் கபில்தேவ்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் செவ்வாய்க்கிழமை விலகினார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலகியதை அடுத்து இந்திய அணிக்கு அன்ஷுமன் கெய்க்வாடை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதுஎன்று வாரியத்தின் செயலர் லேலே தெரிவித்தார்.
கெய்வாட்டை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாரியத்தின் முடிவு பற்றி அவரது மனைவியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளராகப் பொறுப்பேற்க கெய்க்வாட் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் பணியாற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவருக்குத்தேவையான விடுமுறையை வாரியம் கேட்டுப் பெறும் என்றார் லேலே.
கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக்அவுட் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணியில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கானபயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.
இந் நிலையில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலகிக் கொண்டதை அடுத்து உடனடியாக புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நிர்பந்தத்தில் கிரிக்கெட்வாரியம் உள்ளது.
கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக அவரிடம் பல முறை விசாரணை நடத்தப்பட்டது.
கபில்தேவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ்விலக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலக வேண்டும் என்றும் பலர் கோரினர். இந் நிலையில், இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம்என்றும் கூறப்பட்டது.
ஆனால், சில நாட்களுக்கு முன் நிருபர்களைச் சந்தித்த கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, பயிற்சியாளர் பொறுப்பில் கபில்தேவ் தொடருவார்என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில்தேவுக்கு வாரியத்தின் செயலர் லேலே அழைப்பு விடுத்தார். திங்கள்கிழமைதான்இதற்கான கடிதத்தை லேலே அனுப்பினார்.
ஆனால், தான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கபில்தேவ் செவ்வாய்க்கிழமை வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கபில்தேவின் இம் முடிவு கிரிக்கெட் உலகினருக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
கபில்தேவின் முடிவு எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வாரியத்திடமிருந்து எந்த அழைப்பும் எனக்குவரவில்லை.
பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வாரியம் கேட்டுக் கொண்டால் நிச்சயம் நான் அப் பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று இந்திய அணியின்முன்னாள் வீரரும், ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ரோஜர் பின்னி தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications