இந்தியாவில் ரூ.450 கோடியைக் "கொட்டுகிறார் முர்டோச்
பெங்களூர்:
ஸ்டார் டிவி நிறுவனத் தலைவர் ராபர்ட் முர்டோச் அடுத்த ஓராண்டில் இந்தியாவில் பல்வேறு தகவல் தொழில்நுட்பத் திட்டங்களில் சுமார் ரூ. 450கோடியை முதலீடு செய்கிறார்.
ஜப்பானின் சாப்ட் பேங்க், முர்டோச்சின் இ பார்ட்னர்ஸ், இந்தியாவின் பி.கே. மித்தல் குரூப் ஆகியவை இணைந்து இ வென்சர்ஸ் இந்தியா என்ற கூட்டுநிறுவனத்தைத் தொடங்கியுள்ளன.
இந்த கூட்டு நிறுவனம் ஜங்ஷன்-96 என்ற பெயரில் சைபர் கஃபேக்களை நாடு முழுவதும் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே இதற்கு கடந்த ஓராண்டில் ரூ.315 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டில் மேலும் ரூ. 450 கோடியை முதலீடு செய்ய முர்டோச் திட்டமிட்டுள்ளார். ஜங்ஷன்96திட்டத்தின் கீழ் மேலும் பல சைபர் கஃபேக்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்தியாவில் டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 45 ஜங்ஷன்96 சைபர் கஃபேக்கள் தொடங்கப்பட்டுள்ளன.இங்கு இன்டர்நெட் வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஒரு மணி நேரத்துக்கு ரூ.17 வசூலிக்கப்படுகிறது.
இது வீட்டில் இன்டர்நெட் இணைப்பு வசதியைப் பெற செலுத்தப்படும் கட்டணத்தை விட 50 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ஜங்ஷன்96 சைபர் கஃபேக்களின் எண்ணிக்கையை 55 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஜங்ஷன்96-ன் நிர்வாக இயக்குநர் ராஜ்சேகர் அகர்வால்தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications