வருகிறார் கெய்க்வாட்
அகமதாபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அன்ஷுமன் கெய்க்வாட் மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் லேலேதெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில் தேவ், அப் பொறுப்பை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதியபயிற்சியாளராக கெய்க்வாட் நியமிக்கப்படவுள்ளார்.
வடோதராவில் இருந்த கெய்க்வாட்டை லேலே தொடர்பு கொண்டு கபில் தேவ் ராஜிநாமா செய்துவிட்டதையும், பயிற்சியாளர் பொறுப்பை உடனடியாகஏற்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். லேலேயின் வேண்டுகோளை ஏற்று இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க கெய்க்வாட் ஒப்புக் கொண்டார்.
கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 23 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் பயிற்சிபெற உள்ளது. அந்த பயிற்சி முகாமில் கெய்க்வாட் கலந்து கொண்டு அணியினருக்குப் பயிற்சி அளிப்பார்.
செப்டம்பர் 20-ம் தேதி கென்யா போட்டிக்கான 14 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. இந்த அணியுடன் கெய்க்வாடும் கென்யாசெல்வார். மறு உத்தரவு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் நீடிப்பார்.
கெய்க்வாட்டைத் தான் தொடர்பு கொண்ட போது அவர் சிலர நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் தெரிவித்ததாகத் தெரிவித்த லேலே, அவை பற்றிபின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட் ஓராண்டு பணியாற்றி உள்ளார். இப்போது இரண்டாவது முறையாக பயிற்சியாளர் பொறுப்பைஅவர் ஏற்கிறார்.
கபில் தேவ் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவரிடம் விசாரணையும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகளும்மேற்கொள்ளப்பட்டன. அதனால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் விலக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், பயிற்சியாளராக கபில் தேவ் தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்க வரும்படி கபில் தேவுக்கு வாரிய செயலர் லேலே கடிதம் எழுதினார். ஆனால், தனது பயிற்சியாளர் பொறுப்பைகபில் தேவ் ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை முத்தையாவுக்கு அனுப்பிவிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications