ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வங்கி லாக்கர்களில் ரூ. 2 கோடி!
ஹைதராபாத்:
ஆந்திராவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி லாக்கர்களில் இருந்து ரூ. 2 கோடி ரொக்கம், தங்கக் காசுகள், முதலீட்டுப் பத்திரங்கள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தின் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் சுரேந்திர பகதூர் ஸ்ரீவத்சவா. இவர் பணியில் இருந்தகாலத்தில் ஹைதராபாத், விஜயவாடா மற்றும் சில நகரங்களில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இக் குற்றச்சாட்டுகள்குறித்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த இரு நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுரேந்திர பகதூர்ஸ்ரீவத்சவாவுக்குச் சொந்தமான 13 வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஸ்ரீவத்சவா தற்போது அமெரிக்காவில் உள்ளார். இப்போதைக்கு அவர் இந்தியா வருவதற்கு சாத்தியமில்லாததால், அவரது உறவினர்கள் முன்னிலையில்லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. அந்த லாக்கர்களில் இருந்து ரூ. 2 கோடி ரொக்கம், தங்கக் காசுகள், முதலீட்டுப் பத்திரங்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
லாக்கர்களில் அளவுக்கு அதிகமாக ரொக்கம் இருந்ததால் அவற்றைக் கணக்கிட கணக்கிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தும்படி ஆகிவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ரொக்கப் பணம் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளன. லாக்கரில் வைக்கப்பட்ட பிறகு அந்த பணம் வெளியேஎடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மற்றொரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடமிருந்து ரூ. 1 கோடி பணம், மற்றும் ரூ. 2 கோடி மதிப்புள்ள வங்கிமுதலீட்டுப் பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இப்போது மற்றொரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஸ்ரீவத்சவாவிடமிருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற அரசுஅதிகாரிகளிடமிருந்து ஏராளமான ரொக்கம் மற்றும் பத்திரங்கள் கைப்பற்றியதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள ஸ்ரீவத்சவா 1962-ம் ஆண்டு ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தில் சேர்ந்தார். இளநிலைப் பொறியாளராக தனதுபணியைத் தொடங்கிய அவர் தலைமைப் பொறியாளர் அந்தஸ்துக்கு உயர்ந்து கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார்.
பணியில் இருந்த காலத்தில் இவர் மீது பல முறை ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இக் குற்றச்சாட்டுகளை அடுத்து 1976-ம் ஆண்டு பணி நீக்கம்செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
