கடனை அடைக்க "கடத்தல் டிராமா நடத்திய பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அலுவலகத்தில் வாங்கிய கடனை அடைப்பதற்காக தான் கடத்தப்பட்டதாகக் கூறி தனது கணவரிடம் பணம் பெற முயன்ற பெண் அரசு அதிகாரி கைதுசெய்யப்பட்டார்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். வயது 65. இவரது மனைவி ராணி. வயது 45. ராணி, விவசாயத்துறை அதிகாரியாக வேலை செய்துவந்தார். சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இதற்கான ஓய்வூதியம் மற்றும் பல்வேறு படிகளுக்கான பணத்தை வங்கியிலிருந்து எடுக்க வங்கிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவரைக்காணவில்லை. இதற்கிடையே காணாமல் போன அன்று இரவே ராணியின் கணவர் தாமோதரனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ராணியேபேசினார்.

தனது கணவரிடம், என்னை ரவுடிக்கும்பல் ஒன்று கடத்தி பாழடைந்த பங்களா ஒன்றில் அடைத்து வைத்துள்ளது. நான் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில்உள்ளேன். ரூ 1.5 லட்சம் பணம் கொடுக்கவில்லையெனில் வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். நீங்கள் உடனடியாகஅக்கும்பல் கேட்ட தொகையை எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு என்னை மீட்டுச் செல்லுங்கள் என்றார்.

இரண்டாவது முறையும் ராணி, அவரது கணவரிடம் தொலைபேசி மூலம் இதேபோல் பேசினார். ஆனால், தாமோதரன் போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து, ராணி சொன்ன இடத்துக்கு போலீஸார் மாற்றுடைகளில் சென்று கண்காணித்தனர்.

செங்கல் அடைக்கப்பட்ட பெட்டியுடன் தாமோதரனும் அதே இடத்துக்குச் சென்றார். குறிப்பிட்ட நேரத்தில் ராணி அங்கு காரில் வந்திறங்கினார். அவருடன்யாரும் வரவில்லை. அப்போது உன்னுடன் யாரும் வரவில்லையா என்று அவரது கணவர் கேட்டார். இன்னும் சிறுது நேரத்தில் வந்து விடுவார்கள்என்றார் ராணி.

ஆனால், ராணி சொன்ன யாரும் வராததால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை விசாரித்தனர். அப்போது அவரது நாடகம் வெளியே தெரிய வந்தது.விசாரணையில், வேலை செய்த இடத்தில் 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தேன். விருப்பஓய்வு பெற்று பணம் வாங்கினேன்.

அதே நேரம் கணவரிடம் ஒன்றரை லட்சம் பணம் வாங்கி கடனை அடைத்து விட்டு, எனக்குக் கிடைத்த ஓய்வூதியத்தை வீட்டில் கொடுத்து விடலாம்என்று திட்டமிட்டிருந்தேன் என்றார்.

கடனுக்காக கணவரையே ஏமாற்ற முயன்ற ராணியைப் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+