தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பீர்வா என்ற இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 11 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 30கிலோமீட்டர் தூரத்தில் பீர்வா உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உல் முஜாஹிதின் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் கூட்டாக இந்த தாக்குதலுக்குப்பொறுப்பேற்றுள்ளன.
தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்துள்ளனர். பீர்வாவிலுள்ள 34-வதுராஷ்ட்ரிய துப்பாக்கிப் படை முகாமுக்குள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்துள்ளனர். இந்திய வீரர்கள் போலவே உடையும், அவர்கள் வைத்திருப்பதுபோன்ற துப்பாக்கிகளையும் அவர்கள் வைத்திருந்ததால், யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.
முகாமுக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். திடீரென துப்பாக்கியால் இரண்டு பேர் சுடுவதால்அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு திருப்பிச் சுடத் துவங்கினர். ஆனால், அதற்குள் தீவிரவாதிகளின் வெறித் தாக்குதலில் மேஜர்மகேஷ் பாண்டே மற்றும் மூன்று வீரர்கள உயிரிழந்திருந்தனர்.
பிற ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைச் சூழ்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் அருகிலிருந்த ஒரு கட்டடத்திற்குள் ஒளிந்து கொண்டு சுடத்துவங்கினர். இறுதியில் ராணுவ வீரர்கள்இரு தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.
கட ந்த ஆறு மாதங்களில் தீவிரவாதிகள் நடத்திய பெரிய அளவிலான தற்கொலைப் படைத் தாக்குதல் ஆகும் இது.
இத்தாக்குதலில் நான்கு பேர் மட்டுமே ராணுவத் தரப்பில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு கூடுதலாகஇருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தையடுத்து பீர்வா முகாமுக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications