அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் குழப்பம்
சென்னை:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இரண்டாம்நிலை ஊழியர்களுக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேர்வில் பெயில்ஆனவர்கள் கூறியுள்ளனர்.
குளறுபடிகள் குறித்தும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக் கோரியும்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசுத் துறைகளில் குருப்-2 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கானஅறிவிப்பு 98 ம் ஆண்டு வெளியானது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த மே மாதம்நடந்தது.
தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வில் பங்கேற்றனர். கடந்தமாதம் 5 ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இதில், தமிழ்பாடத்தில் 99 சதவீதம் பேர்தோல்வியடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வேண்டுமென்றேபுறக்கணிக்கப்பட்டிருப்பதாக ஆத்திரம் அடைந்துள்ளனர்.
தமிழ் மொழிக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் அரசு தமிழில் தேர்வுஎழுதியவர்களையும், தமிழ் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்தவர்களையும்வேண்டுமென்றே தோல்வியடைய வைத்திருப்பதாக அவர்கள் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.
கம்யூட்டர் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால் தவறுஏற்பட்டிருக்கலாம் என்றும் இதனால் அவற்றை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 17 மற்றும் 18 ம்தேதிகளில் நடக்கிறது. அதற்கு முன்னதாகவே தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தோல்வி அடைந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே திங்கள்கிழமை சென்னையில் தமிழக அரசுத் தேர்வாணையஅலுவலகம் முன்பு கூடிய ஏராளமானோர் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து மனுகொடுத்தனர். முதல்வர் உள்பட அரசு தேர்வாணைய அதிகாரிகளுக்கும் மனுக்களைஅனுப்பியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கைஎடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications