கபில், ஜடேஜாவை மீண்டும் "குடைய வருமான வரித்துறை முடிவு
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கபில்தேவ், அஜய் ஜடேஜா, நிகில் சோப்ரா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேற்கண்ட மூன்று வீரர்கள் மட்டுமல்ல வேறு சிலரிடம் அவர்களது வருமான, செலவுக் கணக்கு பற்றி விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றுவருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு இயக்குநர் எஸ்.சி. பாரிஜா தெரிவித்தார்.
மேற்கண்ட நபர்களின் வருமானக் கணக்கை மதிப்பிட எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்ளும்பொருட்டே இந்த வழக்கமான விசாரணைநடத்தப்படவுள்ளது.
அந்தந்த நபர்களின் வருமானக் கணக்கை மதிப்பிடும்போது எங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அந்த நபர்களை அலுவலகத்துக்குவரவழைத்து விசாரணை நடத்துவோம்.
இப்போதைக்கு எந்தெந்த கிரிக்கெட் வீரரை விசாரணைக்கு அழைப்போம் என்று கூறமுடியாது. திடீரென்று தேவைப்பட்டால் உடனடியாக அவர்களுக்குநோட்டீஸ் கொடுத்து வரவழைப்போம்.
வரும் அக்டோபர் மாதத்துக்கள் எங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அதற்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் யார், யார்வீட்டில் சோதனை நடத்தப்பட்டதோ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவோம்.
அப்போது அவர்ளிடம் அவர்களது கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்துக்களைப் பற்றி விசாரிப்போம். அந்த கணக்குகளைச் சமர்ப்பிக்கஅவர்களுக்கு 40 நாட்கள் அவகாசம் தருவோம்.
உண்மையான தகவல்களைத் தந்தால் அவர்களுக்கு 60 சதவீத கழிவு போக மீதி பணமும், சொத்துக்களும் கிடைக்கும். ஆனால், உண்மையைமறைக்கும் நபர்களுக்கு தண்டனை அளிக்க பரிந்துரைக்கப்படும் என்றார் பாரிஜா.
கபில்தேவ் மற்றும் ஜடேஜாவிடம் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர். கபில்தேவிடம் ஒரு முறை 7 மணி நேரம்விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் அஜய்சர்மாவிடம் மட்டும்தான் இதுவரை விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. ஆனால்,லண்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்பிய அவரிடம் 4 மணி விசாரணை நடத்தப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications