தில்லு முல்லு செய்கிறது மத்திய அரசு ... ஜெ. சாடல்
சென்னை:
ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள மத்திய அரசு தில்லுமுல்லுகளைச் செய்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் புதன் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் ஆளும் பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள எல்லாவித தில்லுமுல்லுகளையும் நிகழ்த்தி வருகிறது. தேசிய அளவில் நிறைவேறும் சிலநிகழ்ச்சிகள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
மேற்கு வங்க மக்களின் நல்லன்பை பெற்று நீண்ட நெடுங்காலமாக ஆட்சி நடத்தி வரும் பெரியவர் ஜோதிபாசுவின் ஆட்சியைக் கலைக்க பாஜக அரசு காயைநகர்த்தி வருகிறது.
மம்தா பானர்ஜியை திருப்திப்படுத்தவும், திரிணமூல் காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து பெறவும் பாஜக ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
மேற்கு வங்கத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உள்நோக்கத்தோடு அனுப்பி வைத்தனர். அவரும் டெல்லியில் தீட்டப்பட்டவஞ்சகச் சதியை நிறைவேற்றும் வகையில் ஒன்றரை நாள் மேற்கு வங்கத்தை சுற்றிப் பார்த்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் பெர்னாண்டஸ் அளந்த கதையை வைத்து மேற்கு வங்க அரசைக் கலைத்து விடுவதாக பூச்சாண்டி காட்டுகின்றனர்.
முறைகேடாக மேற்கு வங்க ஆட்சியை கலைத்து மம்தாவை முதல்வராக்க, மத்திய அரசு ஜனநாயக நெறிமுறைகளைக் குழி தோண்டி புதைக்கும் முயற்சிக்குஎன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications