ராஜ்குமார் கடத்தலைக் கண்டிக்கிறது மக்கள் போர்க்குழு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை மக்கள் போர்க்குழு என்றழைக்கப்படும் நக்சலைட் அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.
சந்தன வீரப்பன் மற்றும் அவனது பின்னணியில் இருக்கும் தமிழ் தேசிய விடுதலைப்படைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்தஅமைப்பு கூறியுள்ளது.
மக்கள் போர்க்குழுவின் தமிழ்நாடு செயலாளர் சீராளன், கர்நாடகச் செயலாளர் உதய் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனும், தமிழ்நாடு விடுதலைப்படையினரும் கடத்தியது தவறு. இதன் மூலம் கர்நாடக - தமிழக மக்களிடையே வீண் கசப்புணர்ச்சிஏற்படும்.
1991ம் ஆண்டு காவிரி பிரச்னையின் போது ஏற்பட்டது போன்ற மோதல் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தேசிய விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்புபடை போன்றவற்றுடன் எங்கள் மக்கள் போர்க் குழுவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இந்த இரண்டு அமைப்புகளும் வீண் சாகசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள இடதுசாரிஅமைப்புகள்.
இவர்களுடன் எங்களுக்கு எந்த சம்பந்தம் கிடையாது. தர்மபுரி மாவட்டத்தில் எங்கள் அமைப்பை சேர்ந்த ரவீந்தர் என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கும் தமிழ்நிாடு விடுதலைப்படை தலைவர் மாறனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சந்தன வீரப்பனுடனும் ரவீந்தர் தொடர்பு வைத்திருந்ததில்லை.
சந்தன வீரப்பனின் காவிரி நீர் பிரச்னை பற்றிய கோரிக்கை அவ்வளவு சரியாக எங்களுக்கு படவில்லை. ஆனால், கர்நாடக சிறையில் உள்ள 121 தடாகைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோருவது நியாயமானது.
அதேபோல் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதும் சரியானதே.
அதிரடிப்படையை கலைத்து விட்டு, சதாசிவம் கமிஷன் சரிவர செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications