பள்ளிகளைத் தத்தெடுக்க கேட்ஸுக்கு ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவனப் பகுதியிலும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியிலும் உள்ள பள்ளிகளைத் தத்தெடுக்கும்படி மைக்ரோசாப்ட்நிறுவனத் தலைவர் பில் கேட்ஸுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய கிளையான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பில்கேட்ஸ் புதன்கிழமை இந்தியா வந்தார்.

இந்திாயவில் ஒரு நாள் மட்டுமே தங்க உள்ள அவரை ஆந்திரம், கர்நாடகம்,மேற்கு வங்கம், கேரளம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள்சந்தித்துப் பேசவுள்ளனர்.

தங்கள் மாநிலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்யும்படி பில் கேட்ஸிடம் அவர்கள் கோர உள்ளனர்.

அப்போது தனது மாநிலத்தில் உள்ள பள்ளிகளைத் தத்தெடுத்து மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும்படி பில் கேட்ஸிடம் கோரராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார்.

ராஜஸ்தானில் இந்திய தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க 100 ஏக்கர் நிலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு இலவசமாகக் கொடுத்துமுதற்கட்ட தவணையாக ரூ.10 கோடி வழங்கவும் தயாராக இருப்பதாக பில் கேட்ஸிடம் தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+