முஷாரப் சென்ற விமானத்தில் வெடிகுண்டு புரளி
நியூயார்க்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியையடுத்து விமானம் மீண்டும் நியூயார்க் நகருக்குதிரும்பியது.
இதுகுறித்து நியூயார்க் விமானநிலைய செய்தித் தொடர்பாளர் ஹைக் கூறியதாவது:
நியூயார்க்கிலிருந்து முஷாரப் மற்றும் 120 பயணிகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தான் சர்வதேச விமானம் கராச்சி வழியாக பாகிஸ்தான் செல்லதிட்டமிட்டிருந்தது. அதன்படி, விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செய்தி கிடைத்தது. தகவல் கிடைத்ததும் விமானம்இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்றில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பரிசோதகர்கள் விமானத்துக்கு வந்து பரிசோதனை நடத்தினர். விமானப் பயணிகள்அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு அவர்களது உடமைகள் அனைத்தும் வெளியே இறக்கப்பட்டன.
அதன்பின் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று பரிசோதனை செய்தததில் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை என்றும், அதுவெறும் புரளி என்றும் தெரிய வந்தது.
விமானத்தில் சோதனை நடந்து கொண்டிருந்த போது விமானப் பயணிகள் அனைவரும் குறிப்பாக பாகிஸ்தான் பயணிகள் அனைவரும் பாதுகாப்பானஇடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து விமானம் பாகிஸ்தான் செல்லாமல் மீண்டும் நியூயார்க் நகரிலுள்ள கென்னடி சர்வதேச விமானநிலையத்துக்கே கொண்டு வரப்பட்டது. மீண்டும்விமானம் எப்போது பாகிஸ்தான் செல்லும் என்பது குறித்து விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications
