காமராஜர் மணி மண்டபம் .. கருணாநிதி திறக்கிறார்
சென்னை:
தமிழக அரசின் சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் கருணநிதி அக்டோபர் 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மறைந்த தலைவர் காமராஜருக்கு கன்னியாகுமரியில் மணி மண்டபம் அமைக்கவேண்டும் என்று காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமுதாயஅமைப்புகளும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தன.
அதை ஏற்று கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுகடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தின்திறப்பு விழா காந்தி பிறந்த நாளும், காமராஜர் நினைவு நாளுமான அக்டோபர் 2-ம்தேதி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வதை ஒட்டி, அக்டோபர் 1-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1-ம் தேதி காலை நடைபெறும் தூத்துக்குடி இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகச்சங்கத்தின் பவள விழா மற்றும் மாலையில் நடைபெறும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி தொடக்கவிழாவிலும் முதல்வர் பங்கேற்கிறார்.
இரவில் தி.மு.க.பணிமனையை அவர் திறந்து வைக்கிறார்.
2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில் நம்பியாறு, ஆரல்வாய்மொழிபொய்கையாறு அணை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்குகன்னியாகுமரியில் மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
3-ம் தேதி மாலை பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி கட்டடத்தை திறந்துவைக்கிறார். திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிறையையும் திறந்துவைக்கிறார்.
இத்தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications