மத்திய அமைச்சருக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை:
மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஏ. பொன்னுசாமிக்கு நோட்டீஸ்அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொன்னுசாமி போட்டியிட்டுவெற்றிபெற்றதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம், இந்த மனுவுக்கு4 வாரத்துக்குள் பதில் தெரிவிக்கும்படி கோரி அமைச்சர் பொன்னுசாமிக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், பொன்னுசாமி வாக்களித்த விருத்தாசலம் வாக்குச்சாவடியின் தேர்தல்அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.
திருமாவளவன் தாக்கல் செய்த மனு விவரம்:
1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொன்னுசாமி போட்டியிட்டார். தான் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளை அவர் கையாண்டார்.
வாக்குச்சாவடியைக் கைப்பற்றியது, கள்ளவோட்டு போட்டது போன்ற செயல்களில்அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இச் செயல்களை எதிர்த்த விடுதலைச்சிறுத்தைகளின் வாக்குச்சாவடி ஏஜென்டுகள் தாக்கப்பட்டனர்.
இது தவிர வன்முறைச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டனார். இதனால், பெரும்பாலானதலித் மக்கள் வாக்களிக்க முடியாமல் போனது. ஆகவே, நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ தேர்தல் நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளில் பொன்னுசாமிஈடுபட்டுள்ளார்.
மேலும், வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில்தான் பொன்னுசாமிக்குவாக்கு உள்ளது. ஆனால், அவர் விருத்தாசலத்தில் வாக்களித்தார். இதற்குவாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரியும் உடந்தையாக இருந்ததுமட்டுமல்லாமல் எனது எதிர்ப்பையும் கண்டுகொள்ளவில்லை.
ஆகவே, பொன்னுசாமியின் வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று தனது மனுவில்திருமாவளவன் கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த மன்னர்மன்னன்என்பவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இந்த மனுவுக்கும்பதில் தெரிவிக்கும்படி அமைச்சருக்கும் தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications