பொருளாதாரத் தடையால் தேசப்பற்றுதான் அதிகரிக்கும் ..பிஜி அமைச்சர்
சுவா:
பிஜியில் பொருளாதாரத் தடை விதிப்பதால் நாங்கள் பாதிக்கப்பட மாட்டோம். மாறாக, தேசப் பற்றுத்தான் அதிகரிக்கும் என்று அந்நாட்டு தகவல்தொடர்பு அமைச்சர் ராட்டு க்யூபோலே வியாழக்கிழமை தெரிவித்தார்.
பிஜியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர பால் செளத்ரி பிரதமராக இருந்தார். கடந்த மே 19 ம் தேதி ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலானபுரட்சிக்கும்பல் செளத்ரி உள்பட அவரது அமைச்சரவையிலுள்ள 29 பேரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தது. இதையடுத்து கலகம் வெடித்தது. பின்னர்ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
பின்னர் புரட்சிக்கும்பலுக்கும், ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இப்பேச்சுவார்த்தையை அடுத்து பிஜியில் பிரதமர் செளத்ரி உள்படஅவரது அமைச்சரவை சகாக்கள் விடுவிக்கப்பட்டனர்.
புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் கைது செய்யப்பட்டார். அவர் மேல் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், பிஜியில் பொருளாதாரத் தடை விதிப்பதால், மக்களின் தேசிய உணர்வு அதிகரிக்குமே தவிர வேறு எந்தப் இழப்பும் ஏற்படாது. பிஜியில்வாழும் 4 லட்சம் மக்களுக்கும் பொருளாதாரத் தடை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பிஜி மக்கள் தங்கள் உரிமைகளுக்கு அங்கீகாரம் கோருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியோர்பொருளாதாரத் தடை விதிப்பதாக மிரட்டுகிறார்கள். ஆனால் இதையும் தாண்டி பிஜி மக்கள் சமாளிப்பார்கள்.
பணக்கார நாடுகள், பிஜி போன்ற சிறிய தீவுகள் மீது தங்களது ஆதிக்கத்தை திணிக்க முயலுகின்றனர். இதற்காகவே இந்த நாடுகள் கைகோர்க்கின்றனஎன்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications