வாஜ்பாயை வரவேற்று அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்
வாஷிங்டன்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதற்குஅந் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது முழுமையான ஆதரவைத்தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நியுயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை வந்தார் வாஜ்பாய்.அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை முதல் அவர் தனது அமெரிக்காவுக்கான 4 நாள் அரசு முறைப்பயணத்தைத் தொடங்குகிறார். அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம்மேற்கொள்வதற்கான தங்களது முழுமையான ஆதரவை அமெரிக்க நாடாளுமன்றஉறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக நியுயார்க் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், நாடாளுமன்றத்தில்சர்வதேச உறவுகள் தொடர்பான கமிட்டியின் தலைவருமான பெஞ்சமின் கில்மேன்கொண்டுவந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப்பிரதமர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் போராடவும், இரு நாடுகளுக்கும்இடையான உறவுகள் தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையை மேலும்விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தை வாஜ்பாய் வலியுறுத்தியுள்ளது மிகவும்குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு அரசுகளும் சட்டத்தின் படி நடந்து சட்டத்தைக் காக்கவும், ஜனநாயகம்மற்றும் மதச் சுதந்திரத்தைக் காக்கவும் போராடும் என்பது உறுதி என்று தீர்மானத்தைஅறிமுகப்படுத்தி பேசிய கில்மேன் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications