ரயிலிலிருந்து குதித்து ராணுவ மேஜரின் மனைவி தற்கொலை
டெல்லி:
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ மேஜரின் மனைவி ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீரிலுள்ள பீர்வா அருகேயுள்ள பட்காம் பகுதியில் லஸ்கார் இ தொய்பா தீவிரவாதிகளால், மேஜர் பாண்டே என்பவரும், 10 ராணு வீரர்களும்செப்டம்பர் 11 ம் தேதி கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாண்டேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மனைவி ஜெயா பாண்டே, அவரது மாமனார், பிற குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்பஞ்சாப் மாநிலம் பாதன்கோட்டிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்துக்கு புதன்கிழமை ரயிலில் சென்றனர்.
சொந்த ஊரான அலகாபாத்துக்கு, மேஜர் பாண்டேவின் உடல் தகனத்திற்காக புதன்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதாகஇருந்தது.
ரயில் டெல்லி அருகேயுள்ள தாத்ரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஜெயா, கழிவறைக்குச் செல்வதுபோல் எழுந்து சென்றார். கணவரின் பிரிவைத்தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுது கொண்டே அவர் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்தார். உடனடியாக அவரது உறவினர்கள் அங்கு வந்து ரயிலில்உள்ள சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாகப் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் அங்கு விரைந்து சென்று ஜெயாவின் சடலத்தை மீட்டனர். ஜெயாவுக்கும்,ராணுவ அதிகாரி பாண்டேவுக்கும் 1998 ம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications