முதல் பதக்கம் எந்தப் போட்டிக்கு?
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் பிரிவில்தான் முதல் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக பெண்களுக்கான டிரையத்லான் போட்டியில்தான் முதல் பதக்கம் வழங்கப்படும் என்று கருதப்பட்டது.
இரு போட்டிகளும் சனிக்கிழமை காலை நடைபெற உள்ளன. டிரையத்லான் போட்டி அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், அப்போட்டிமுடிவதற்கு முன்பே பெண்களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி முடிவடைந்து விடும்.
ஆகவே, துப்பாக்கிச் சுடும் போட்டியில்தான் சிட்னி ஒலிம்பிக்கின் முதல் பதக்கம் வழங்கப்படவுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் முதல் பதக்கத்தைசர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்தான் வழங்கவேண்டும் என்பது சம்பிரதாயம்.
அதன்படியே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் சாமரான்ச், துப்பாக்கிச் சுடும் வளாகத்துக்கு வந்து பதக்கங்களை வழங்குகிறார்.
டிரையத்லான் போட்டியில்தான் முதல் பதக்கம் வழங்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டதால் அப் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.இப் போட்டி நடைபெறும் சிட்னி ஹார்பார் பகுதியில் பார்வையாளர்களுக்கு அதிக வசதிகள் செய்து தரப்பட்டன.
இப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாக இருந்தது.தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் தொலைக்காட்சி விரிவாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முதல் பதக்கம் துப்பாக்கிச் சுடும் போட்டியில்தான் என்று முடிவானதை அடுத்து டிரையத்லான் போட்டிக்கு இருந்த எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications