16 வயதினிலே ...
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இரண்டாவது மகன் ஹாரி வெள்ளிக்கிழமை தனது 16 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்த நாள் கொண்டாடிய ஹாரி, தனது தந்தையும், இளவரசருமான சார்லசுடன் மிகவும் உற்சாகமாகவும், தன்னம்பிக்கையுடன் காணப்பட்டார்.
ஹாரி லண்டனில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உயர்நிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் ஹாரி அடுத்தாகபல்கலைக்கழகத்திற்கு சென்று தனது படிப்பைத் தொடரவிருக்கிறார்.
ஹாரியின் அண்ணன் வில்லியம் பள்ளி இறுதி வகுப்பை முடித்தபின் ஒரு வருட இடைவெளிக்குப் பின்தான் ஸ்காட்லாந்திலுள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில்4 வருடப் பட்டப்படிப்பில் வரலாற்றுப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications