பெண்கள் 400 மீட்டர் தனி நபர் தொடர் நீச்சல்: தோற்றார் உலக சாம்பியன்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் தனி நபர் தொடர் நீச்சல் போட்டியின்தகுதிச் சுற்றிலேயே உலகச் சாம்பியனான சீனாவின் சென் யான் தோல்வியுற்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற தகுசிச் சுற்றில் அவர் 4-வதாக வந்தார். இதனால், அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை.
1998-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர்உலக சாதனை படைத்தார். அந்த போட்டிக்குப் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டார் சென்யான்.
இந்த சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் சீனாவின் சார்பில் கலந்து கொண்ட ஒரேஉலக சாம்பியன் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தய தூரத்தை இவர் 4 நிமிடம் 45.65 விநாடிகளில் கடந்தார். இது இவர் படைத்த உலகசாதனை நேரத்தை விட 10 நொடிகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் போட்டியில் போதை மருந்து சோதனையில் பல சீன நீச்சல் வீரர் மற்றும்வீராங்கனைகள் பிடிபட்டனர். தேசிய, ஒலிம்பிக், உலக சாதனையாளர்களான இவர்கள்சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சில காலத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சலில் நிறைய தங்கப் பதக்கத்தை வெல்லலான் என்ற கனவில்இருந்த சீனாவுக்கு இத் தடை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications