சுப்ரீம்கோர்ட்டில் 18-ம் தேதி கர்நாடக மனு மீது விசாரணை
பெங்களூர்:
தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 18 ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரேகெளடா வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன்நிபந்தனை விதித்திருந்தான். அதன்படி, கர்நாடக அரசு கைதிகளை விடுவிக்கலாம் என்று முடிவு செய்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட், கைதிகளை விடுவிப்பதற்குஇடைக்காலத் தடை விதித்து, 10 நாட்களுக்குள் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை 18-ம் தேதிதுவங்குவதாக தற்போது கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகள் உள்பட 121 பேரை விடுவிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் சார்பில்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் அப்பாவிகள். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் எல்லைப்பகுதியில்வாழும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பிரச்சனைகளை தவிர்க்கும் விதத்திலுமே அவர்களை விடுவிக்கக் கோருகிறோம் என்றுமனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 1984 ம் ஆண்டு முதல் வீரப்பனைப் பிடிப்பதற்கு கர்நாடக, தமிழக அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன என்றும் அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு வருகிற 18 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார்.
அப்போது, நிருபர் ஒருவர் இப்போது அப்பாவிகள் என்று கருதப்படும் இவர்களை கடந்த 8 ஆண்டுகளாக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றார்?அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரே கவுடா, இந்தப் பிரச்சனை அப்போது கோர்ட்டில் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications