இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.27 ஆயிரம் கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
வாஷிங்டன்:
இந்தியா-அமெரிக்கா இடையே ரூ. 27 ஆயிரம் கோடிக்கு 5 புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்கையெழுத்தாகியுள்ளன.
இந்தியப் பிரதமர் வாஜ்பாயி மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பயணத்தின் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மின்சாரம், ஈ.காமர்ஸ், வங்கித்துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பைமேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அமெரிக்க வர்த்த அமைச்சர் நார்மன்மினெட்டா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த 5 ஒப்பந்தங்களில் 3 ஒப்பந்தங்கள் மின்துறையையும், ஒன்று வங்கித்துறையையும், மற்றொன்று ஈ.காமர்ஸ் துறையையும் சேர்ந்தவை.
இந்தியாவில் தனியார் துறையில் 3 பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதுதொடர்பாக செய்து கொள்ளப்பட்டுள்ள மின்துறை ஒப்பந்தங்களின் கீழ் தமிழகத்தில்இரு மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படும்.
சென்னை எண்ணூ
மற்றொரு மின் திட்டம் ஒரிசாவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த மின் உற்பத்திநிலையத்தின் மூலம் 3,800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
வங்கித் துறையின் கீழ் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் சினர்ஜீஸ் மின் உற்பத்திப்பிரிவுக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி நிதி கார்ப்பரேஷனுக்கும் இடையேகையெழுத்தானது.
ஈ.காமர்ஸ் துறையின் கீழ் இந்தியாவின் சத்யம் இன்போவே நிறுவனத்துக்கும்அமெரிக்காவின் பிசினஸ் நெட்வொர்க் இன்க். நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம்கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications